தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் நீட்தேர்வு குறித்து தெரிவித்திருந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி ஸ்டாலினுக்கு தக்க பதிலடியை தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கொடுத்துள்ளார்.
NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை! : ஸ்டாலின்
மு ,க.ஸ்டாலின். 10 வது மற்றும் +2 தேர்வு தோல்வி மற்றும் தேர்வு பயத்தில் கடந்த காலங்களில்
நூற்றுக்கணக்கான தமிழக மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் 10 வது மற்றும் +2 தேர்வை நிறுத்த சொல்லி போராடாதவர்கள், கண்டிக்காதவர்கள், கவலைப்படாதவர்கள், தற்போது நீட் தேர்வை பூதாகாரமாக்கி, அச்சத்தை உண்டாக்கி மாணவ மாணவிகளின் தற்கொலைக்கு
தூண்டுவதன் மர்மம் என்ன? கல்வியை வியாபாரமக்கிய வியாபாரிகளின் கபட நாடகத்தை மக்கள் உணர்ந்தே உள்ளார்கள். மாணவ மாணவிகளின் உள்ளத்தில் நஞ்சை விதைத்து, தங்களின் அரசியல் பிழைப்பை நடத்தும் அரசியல்வாதிகளை புறந்தள்ளும் நாள் வெகு அருகில்.
மு.க.ஸ்டாலின். டாக்டர் பட்டம் பெறுவதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலையை மூடி மறைத்த கல்வி கொள்ளையர்கள், நீலிக்கண்ணீர் வடித்து மலிவு அரசியலை முன்னெடுக்கும் கொடுஞ்செயல்.