Share it if you like it
சத்தீஸ்கரில் கடந்த மாதம் மார்ச் 14 அன்று பஸ்தாரில் நடந்த ஒரு நக்சல் தாக்குதலில் CAF வீரர் ஒருவர் வீர மரணம் எய்தினார். இந்நிலையில் வீர மரணமடைந்த வீரரின் தற்போது விதவை கோலத்தில் உள்ள அவரது மனைவியான ராதிகா சாஹு முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ .10,000 நன்கொடை அளித்துள்ளார். நீங்களே கணவரை இழந்து இக்கட்டான நிலையில் இருக்கும்போது எதற்காக அரசுக்கு இந்த உதவியை செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அவர், “என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவார், அதனால்தான் நான் அவ்வாறு செய்ய முடிவு செய்தேன் என்று கூறினார். இந்த சம்பவம் அங்கிருந்தோரை கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
Share it if you like it