நெறியாளர் செந்திலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

நெறியாளர் செந்திலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

Share it if you like it

பிரபல இணையதள ஊடகத்திற்கு பாஜக துணை தலைவர் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். திமுக தலைவர்களோடு நடுநிலை ஊடகத்தில் நேரடி விவாதத்திற்கு நான் தயார் என்று அண்ணாமலை ஜ.பி.எஸ் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில் நான் தயார் என்று டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். பிரபல ஊடகத்தில் இருந்து அண்மையில் வெளியேறிய செந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

திரு. அண்ணாமலை அவர்கள் தயார். டாக்டர் செந்திலும் தயார் எனில் தொடங்கலாம் என் கேள்விகள் ஏதும் இன்றி அவர்கள் இருவருக்குமான விவாதமாகவே அது இருக்கட்டும். இருவருக்கும் சமமான நேரத்தை பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவற்றை மட்டும் நான் செய்கிறேன். நேரலை நிகழ்ச்சியாகவே திட்டமிடலாம்.

நெறியாளர் செந்தில் பதிவிற்கு நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.


Share it if you like it