Share it if you like it
- நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கமும் பெரும்பாலான மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில், அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்வதை சிலர் புறக்கணித்து அவற்றைப் பின்பற்ற மறுக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று, பங்களாதேஷில் இருந்து வந்த 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை கொரோனா பரிசோதனை செய்ய ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் மாணவர்கள் பரிசோதனை செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிப்போகவே அந்த மாணவர்கள் விமான நிலையத்தின் கண்ணாடி ஜன்னல்கள், மின்விசிறிகள் மற்றும் வருகை பகுதியில் உள்ள கவுண்டர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கினர்.
- அதன்பிறகு, விமான நிலைய அதிகாரிகளும், சி.ஐ.எஸ்.எஃப் உள்ளூர் போலீசாரையும் அழைத்து பிரச்சினையை தீர்த்தனர். காவல்துறை ஒரு மாஜிஸ்ட்ரேட்டுடன் வந்து மாணவர்களை ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் அப்பொழுதும் அவர்கள் ஒப்புக் கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் பேசினார்கள். பின்பு, மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாணவர்களைத் தடுத்து, அவர்கள் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் அதிகாரி ஒருவர், விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it