இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலம் படாலா நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் தனது 5 வயது மகனை டியூசன் செல்லுமாறு வற்புறுத்தி அனுப்பியுள்ளது.
ஜாலியாக வீட்டில் விளையாடி கொண்டு இருந்த அச்சிறுவனுக்கு இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அழுது கொண்டே சென்று உள்ளான் அச்சிறுவன்.
ஒரு கட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட, அநீதிக்கு எதிராக போராட வேண்டும், என்ற எண்ணம் தோன்றியதால். டியூசன் செல்லாமல், நேராக காவல் நிலையம் சென்று, டீச்சர் மற்றும் பெற்றோருக்கு எதிராக புகார் அளித்துள்ளான்.
காவல்துறையின் உயர் அதிகாரிகள், புகார்தாரரின் வழக்கை ஏற்றுகொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனை அடுத்து அச்சிறுவன், டீச்சரின் வீட்டையும், தனது வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளான். டி.எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அச்சிறுவன் முன்னே அவர்களுக்கு சிறப்பான பாடம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அக்காணொலி நாடு முழுவதும் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/GautamTrivedi_/status/1255521173095546881