திருப்பாணாழ்வார் பாரம்பரியமான இசை குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே ஸ்ரீரங்கம் பெருமாள் மீது மாறா பக்தி கொண்ட தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஓர் நாள் திருவரங்கனை நினைத்து காவிரி ஆற்றின் கரையில் தன்னையே மெய் மறந்த நிலையில் பாடி நின்றார். ஸ்ரீரங்கநாருக்கு திருமஞ்சனம் செய்ய அபிஷேக நீர் கொண்டு வர சென்ற பட்டர் (வைணவ அர்ச்சகர்) சற்று தள்ளி நில்லுங்கள் என்று பல முறை திருப்பாணாழ்வாரிடம் கூறினார்.
ஆனால் அவரோ தன்னையே மெய் மறந்து பாடி கொண்டு இருந்தார். இதனால் கோபம் கொண்ட பட்டர் (வைணவ அர்ச்சகர்) கல்லை எடுத்து அவர் மீது வீசினார். கல் பட்டு நெற்றியில் ரத்தம் வழிய அவர் விலகினார். அதன் பிறகு நீர் கொண்டு சென்ற பட்டர் (வைணவ அர்ச்சகர்) அரங்கன் நெற்றியிலும் ரத்தம் வடிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்பொழுது ஒர் அசரீரி (ஒலித்தது) என் பக்தனை நீ உன் தோளில் சுமந்து இங்கு அழைத்து வந்தால் ரத்தம் வழிவது நிற்கும் என்று கூறியது. ஹிந்து மதத்தில் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற உண்மையை நினைவு கூறும் வண்ணம்.
ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி தெலுங்கான மாநிலத்தில் நடைபெறும். அதே போல் ஸ்ரீ லக்ஷ்மி ரங்கநாத சுவாமி கோவிலில் ரவி என்னும் பட்டியலினத்தவரை தோளில் சுமந்து செல்லும் நிகழ்வு இவ்வருடம் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Goodnews