சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா? (1/7)
பத்திரிக்கை ஊழியர்களை பட்டப்பகலில் படுகொலை செய்தவர்கள், பால்மலரை எரித்து கொன்று மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்கள், புத்தரை போன்று நடிக்கலாமா? (2/7)
நில அபகரிப்புகளால் மக்களின் நிம்மதியை குலைத்தவர்கள், சைகோ கொலைகள் சரம் சரமாய் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கை சீரழித்தவர்கள், உத்தமர் வேஷம் போடலாமா? (3/7)
ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள், நட்புக்கும் நஞ்சூட்டி முடித்தவர்கள்; நடைபயிற்சியையும் கொலை பயிற்சி ஆக்கியவர்களுக்கு குற்றம் குறை கூற தகுதி உண்டா? (4/7)
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களை தயாரிப்பதற்கு தொழிற்சாலை வைத்தும் சண்டியர்தனம் செய்கின்ற ஒருவரை சட்டமன்ற உறுப்பினராய் கொண்டியிருக்கும் சண்டாளர்கள். இப்படி வன்முறைக்கே வடிவான திமுக… (5/7)
சாதிமத பூசலின்றி சட்டம் ஒழுங்கை பேணிகாத்து தவறிழைப்பவர்கள் யாராயினும் தயவு காட்டாது நீதியின் மாண்பை நிலை நாட்டும் எளிமைச் சாமானியர் எடப்பாடியார் அரசை குறித்து விமர்சனம் செய்யலாமா? நாட்டின் ரகசியங்களை அண்டை நாட்டுக்கு கசியவிட்ட தேச விரோத குற்றச்சாட்டிற்காகவும், (6/7)
சட்டம் ஒழுங்கை சீரழித்ததற்காகவும், மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கருப்பர் கூட்டத்தின் கையாள் திமுகவுக்கும் அதன் தலைவர் முக.ஸ்டாலினுக்கும், எடப்பாடியார் அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அது இப்போதும் இல்லை.. எப்போதும் இல்லை!! (7/7)