Share it if you like it
பயங்கரவாதம் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்துகிறது என ஐ.நாவில் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கில் கலந்துக்கொண்டு பேசிய ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி சையது அஃபருத்தின் பயங்கரவாதம் உலகை மிகவும் அச்சுறுத்துகிறது. ஐ.எஸ்.ஐ, ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டவருகின்றன என்றார் .
மேலும் அவர் கூறியதாவது போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனைசெய்பவர்கள், கொள்ளை கும்பல் போன்றவர்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு நாசவேலையில் ஈடுபடுகின்றனர். சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டன, என பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார்.
Share it if you like it