Share it if you like it
- இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் உழைத்து ஊதியம் பெறுகின்ற ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பாதிப்புகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் நிற்பது ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள்தான். கொரோனா நெருக்கடி நிலையிலும் அவர்களின் பங்களிப்பை பெரிதும் அளித்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
- தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள ஏழை மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரே நேரில் சென்று உணவுப்பொருட்கள் வழங்கி வருகிறார்கள். மேலும் தமிழ்நாட்டின் ஒரு மூலையில் மலைப்பகுதியில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு கூட உணவு பொருட்கள் மற்றும் போதிய அளவு பணத்தை வழங்கியுள்ளனர்.
- மேலும் ஊடங்களிலும், செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்து வருகின்ற கொரோனா நிவாரண உதவியை பற்றி மக்கள் சொல்வதை நாம் தினந்தோறும் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த சேவையை கண்டு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது ஒரு பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
- இதற்கு ஒரு உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வாட்டும் கடுமையான வெயிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் நேரில் சந்தித்து இளநீரை வழங்கினர். அதை பருகிய பெண் காவலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து நன்றி கூறினர். மேலும் அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஆர்எஸ்எஸ் சேவை மனம் யாருக்கும் வராது என்று பாராட்டினார்.
- இவ்வாறு சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயரை கெடுக்கும் வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் திராவிட கட்சியை சேர்ந்த சமூக வலைதள போராளிகள் ஹாஸ்டக் டிரெண்டில் ஈடுபட்டனர்.
- இதுபோல் பல போலி குற்றச்சாட்டுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது பரப்பி வருகின்றனர். இருப்பினும் மக்கள் இந்த அமைப்பை பற்றியும், அவர்கள் செய்து வரும் சேவையை பற்றியும் மக்கள் முழுமையாக புரிந்து வைத்திருப்பதால் திராவிட கட்சிகள்,கம்யூனிஸ்ட் , இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சைமனின் தம்பிகள் என பலர் பரப்புகின்ற வதந்தியை மக்கள் நம்புவதில்லை. இதுபோல் குற்றச்சாட்டுகள் வந்தாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் மக்கள் சேவையை மகேசன் சேவை என்று ஆர்எஸ்எஸ் தன் பணியை மிக சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it