பழைய செய்தியை தூசி தட்டி ஜாதி அரசியல் செய்யும் திருமா மக்கள் கடும் கண்டனம்!

பழைய செய்தியை தூசி தட்டி ஜாதி அரசியல் செய்யும் திருமா மக்கள் கடும் கண்டனம்!

Share it if you like it

அண்மை காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பேச்சு, எழுத்து, அனைத்தும் ஜாதி, பற்றியே அநேகமான கருத்துக்களை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ஆர்.எஸ். பாரதி பட்டியல் சமூக மக்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தற்கு கண்டனம் இல்லை. ஆனால் அவரை கைது செய்ததற்கு தனது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதே போன்று

தகுதியின் அடிப்படையிலா அல்லது பட்டியல் சமூக ஒட்டு கிடைக்கும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலா எல். முருகனை பாஜக  தலைவராக கொண்டு வந்துள்ளது என்று கேள்வி எழுப்பியதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில்.

தற்பொழுது உண்மைக்கு மாறாக குடியரசு தலைவர் பற்றி தவறான தகவல் ஒன்றினை மீண்டும் ஜாதியை அடிப்படையாக கொண்டு டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

பாஜக சாதி அரசியல்
குடியரசுத்தலைவரின் குடும்பத்தினரை ராஜஸ்தானில் பிரம்மா கோவிலின் உள்ளே நுழைய விடாமல் படிகட்டிலேயே வழிபடச்செய்தார்களே. அது ஏன்? அதன் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட பாஜக முன்வருமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து குடியரசுத்தலைவர் மாளிகை மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளது.திருமதி. ராம்நாத் கோவிந்த் அவர்களின் மூட்டு வலியின் காரணமாகவே கோவிலுக்குள் முழுமையாக செல்லவில்லை என்றும், ஆனால் குடியரசுத்தலைவரின் மகள் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்ததாக வும் தெளிவுபடுத்தியுள்ளது.


Share it if you like it