கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன். அரைநூற்றாண்டுக்கு மேல் அடிப்படை உரிமைகளை கூட பெற முடியாமல். நிம்மதி காற்றை சுவாசிக்க ஏங்கிய மக்களுக்கு 370-வது சட்ட பிரிவை நீக்கி பாரதப் பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை வழங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
பாகிஸ்தான் அண்மையில் (POK) மற்றும் ஜம்மூ-காஷ்மீர் எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று புதிய வரைப்படத்தையும். சில பகுதிகளுக்கு பெயரை மாற்றியும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க சிறுப்பிள்ளைதனமான விளையாட்டை தொடங்கியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள (POK) பகுதியை சார்ந்த மருத்துவம் படித்த மாணவர்களின் சான்றிதழ் இனிமேல் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானிற்கு மரண அடி கொடுக்கவும் (POK) என்றும் இந்திய பகுதி. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இந்திய அரசு கொடுக்கும் சான்றிதழ் மட்டுமே உண்மையாக இருக்கும் என்று, அந்நாட்டிற்கு நேரடியாக மோடி அரசு பதில் அளித்துள்ளது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.