ஜாதி, மதம், இனம், கடந்து அனைத்து தரப்பு மக்களும் சகோதர்களாக வாழ்ந்து வரும் இச்சூழ்நிலையில். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எழுத்து, பேச்சு, அனைத்தும் வன்மம் நிறைந்ததாக உள்ளது என்று மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
தயாநிதி மாறன் பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்திய பொழுது கண்டிவிக்கவில்லை. அண்மையில் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டபொழுது தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார் திருமா. இவரின் முரண்பட்ட போக்கு அக்கட்சி தொண்டர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் பற்றி திருமாவளவன் தற்பொழுது தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சாதி அரசியல்..
சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழி நடத்தும் தலைமைக்குரிய தகுதிபடைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?
திறமையின் அடிப்படையில் இப்பொறுப்பிற்கு வந்திருக்கும் முருகனிடம். தலீத் சமூகமா என்று ஏன்? திருமா கேட்க வேண்டும் என நெட்டிசன்கள் உள்பட தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவர் முருகன்ஜி ஒன்றும் உங்களை மாதிரி சரக்கு மிடுக்கு பேச்சாளர் அல்ல.
அவருடைய தகுதிக்கும் திறமைக்கும் தான் இந்தப் பதவியே தவிர தலித் சகுகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அல்ல.
பாஜகவில் தலித் என்று யாரையும் பார்ப்பது இல்லை. எல்லோரையும் இந்தியர்களாகத்தான் பார்ப்போம்..— 🇮🇳Siva Subiramanian🇮🇳 (@SivaSubiramani3) May 23, 2020
இந்தியனாக இருப்போம் இந்தியாவை நேசிப்போம்.இது தான் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை