மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா இப்போது முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். “நாங்கள் அதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பம் இருக்கும், உறுதியற்ற தன்மை இருக்கும், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார் என கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி பேசி இருந்தார்.
இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால் இறக்குமதியாளர்கள் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை ஆகும்.
மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது, இந்தோனேசியா 43 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது என்று வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.