“பாரத மாதா சிலையை இழிவுபடுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாது” தவறு செய்த அதிகாரிககளை தண்டியுங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதிய எம்.பி- கே.ஜே. அல்போன்ஸ்!

“பாரத மாதா சிலையை இழிவுபடுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாது” தவறு செய்த அதிகாரிககளை தண்டியுங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதிய எம்.பி- கே.ஜே. அல்போன்ஸ்!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த முத்து குமார் என்னும் ஒரு தினக்கூலி தொழிலாளி ஒருவர் தனது சொந்த நிலத்தில் ஒரு கோவில் ஒன்றை உருவாக்கி. தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு பாரத மாதா சிலை ஒன்றை அக்கோவிலில் நிறுவியுள்ளார்.

சில தீய நோக்கம் கொண்ட நபர்களின் புகாரின் அடிப்படையில் அக்கோவிலில் இருந்த பாரத மாத சிலையை காவல்துறையினர் தார் பாயால் மூடி அவமதித்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தருண் விஜய் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

முத்து குமாருக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதிய, தருண் விஜய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்போன்ஸ்.

இந்நிலையில் முன்னாள் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கே.ஜே. அல்போன்ஸ் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

தினசரி ஊதியம் பெறும் திரு முத்து குமாருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். பாரத மாதாவின் கெளரவத்தை மீண்டும் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும், தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று. அண்மையில் பாஜக தலைவர்கள் தருண் விஜய் மற்றும் கே.ஜே. அல்போன்ஸ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it