பால் உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருகிறது!

பால் உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருகிறது!

Share it if you like it

இந்தியா பால் உற்பத்தியில் கடந்த  ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கண்டு வருவதாகவும் . இதன் அடிப்படையில்  பால்  உற்பத்தியில் 6.4 சதவீதம் வளர்ச்சியை எட்டி உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2014-15 ஆம் ஆண்டு மட்டும் 146.3 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி இருந்தது. அதனை அடுத்து உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை துறை சார்பில் மேற்கொண்டதில் 2018-19 ம்  ஆண்டில் 187.7 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாகவும்.  இதன் மூலம் பால் வளத்துறையில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கவும்  பல்வேறு  வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 


Share it if you like it