வழிபாட்டு  தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வழிபாட்டு தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Share it if you like it

கடந்த 2019 ஜனவரி 1ம் தேதி சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும்  பிளாஸ்டிக் பொருட்களை தமிழகம் முழுவதும்  உபயோகப்படுத்த கூடாது என்று அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆலயம், மசூதி, சர்ச்  ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார் . இதற்கு அரசு தரப்பில்  சணல்பை, துணிப்பை, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பை ஆகியவற்றை கொண்டுவருமாறும்,  பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில்  பேனர் வைக்கவும்

போராட்டம், ஆர்ப்பாட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், மற்றும் ஊர்வலம் என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்கின்ற நிபந்தனையையும் இனணக்க உள்ளோம் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it