பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தினம் தினம் சிறுப்பான்மையினர் சொல்லோண்ணா துயரத்திற்கு ஆளாவதும் பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மன உளைச்சலுக்கு மருந்தே இல்லை என்னும் நிலையே அங்கு நிலவுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாத் மாவட்டத்தில் இருந்து மெஹாக் குமாரி என்னும் 14 வயது ஹிந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக முஸ்லீம் நபருக்கு திருமணம் செய்து வைத்தனர் மதகுருமார்கள் என்னும் பெயரில் உள்ள மடையர்கள்.
அச்சுறுத்தப்பட்ட காரணத்தால் நான் இஸ்லாத்தை மனபூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன், என பொய் வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தால். இந்நிலையில் அச்சிறுமி மீண்டும் நீதிமன்றம் சென்று தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூறி முந்தைய வாக்குமூலத்தை வாபஸ் பெறுவதாக கூறினால்.
இதனால் ஆத்திரம் அடைந்த மடையர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறியதாலும் புனிதமான இஸ்லாத்தை கலங்கப்படுத்தியதாலும் மெஹாக் குமாரியின் தலையை வெட்ட வேண்டும் என்று ஜிஹாதிகள் ஊடகங்களில் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.