தமிழக பா.ஜ.கவை சார்ந்த பி.டி. அரசகுமார் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில் இணைந்துக்கொண்டார். இந்நிலையில் அனைத்து செய்தி ஊடகங்களும் தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் திமுகவில் இணைந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுவருகின்றன. ஆனால் அரசகுமார் அவர்களின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் மாதமே முடிந்துவிட்டது. பாரதிய ஜனதாவின் கட்சிவிதிப்படி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் பதவியில் உள்ள அனைவரின் பொறுப்புகளும் காலாவதியாகிவிடும், அமைப்பு செயலாளர் பொறுப்பைதவிர.
ஏனெனில் அமைப்பு செயலாளர் தான் உட்கட்சி தேர்தலை நடத்தவேண்டும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே தமிழக பா.ஜ.கவில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பார்க்கும் போது பி.டி. அரசகுமார் கட்சியில் எந்தவிதமான பொறுப்புமற்ற அடைப்படை உறுப்பினர் மட்டுமே. பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் தன்னை ஏற்கமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு தான் தற்போது அரசகுமார் பதவிக்காக திமுக பக்கம் தாவியுள்ளதாக பா.ஜ.கவினர் தெரிவிக்கின்றனர். இதில் சுயநலன் மட்டுமே உள்ளது அன்றி கொள்கை, மக்கள் நலன் எங்கிருந்து வந்தது. எனவே ஊடகங்கள் அனைத்தும் தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அரசகுமார் என்று குறிப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என பா.ஜ.க தரப்பினர் கூறிவருகின்றனர்.