Share it if you like it
அயோத்தியா வழக்கில் கருத்துக்கூற பா.ஜ.க தலைமை கடும்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அயோத்தியா வழக்கில் தீர்ப்பு நாளன்று பிரதமர் நரேந்திர மோடி மட்டும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா அவர்களின் அதிகாரபூர்வ அறிக்கை வெளிவரும்வரை யாரும் கருத்துக்கூற கூடாது என பா.ஜ.க தலைமை அறிவிப்புவெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அயோத்யா வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பா.ஜ.க தலைவர்கள் யாரும் ராமஜென்ம பூமி வழக்கில் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share it if you like it