2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்படலாம் என நிதிஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் 2019 ஆம் ஆண்டிற்கான பொதுபட்ஜெட்டு ஜூலை 5 ஆம் தேதியும் பொருளாதார அறிக்கை ஜூலை 4 ஆம் தேதியும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது பிப்ரவரி முதல் தேதியும் பொருளாதார அறிக்கையானது ஜனவரி 31 ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி பார்க்கும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 லிருந்து 8 சதவீதத்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிடவேண்டும். இது குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.