தவறு செய்தவன் யார்? அதனை தூண்டி விட்டவன் யார்? ஜாதி, மதம், இனம், ஓட்டு வங்கி, அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்பே திக., திமுக, அதன் கூட்டணி கட்சி தோழர்கள் தங்கள் கருத்தினை முன்வைப்பர் என்பது தமிழக மக்களின் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல ஓவியருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பிரபல ஓவியர் வர்மா அண்மையில் தனது கருத்தினை பின்வருமாறு கூறியிருந்தார்.
”கருப்பர் கூட்டத்தின் பின்னால் இயங்கும் இஸ்லாமிய கும்பலை இஸ்லாமிய தலைவர்களே முன் வந்து கண்டிக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும், ஹிந்து துவேஷ கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு தாங்கள் ஹிந்துக்களின் பக்கம் நிற்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கருப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் இயங்கும் ஹாசிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவிக்க வேண்டும். அதுவும் 24 மணி நேரத்தில் இதை செய்ய வேண்டும்.
ஜாபர் ஏ முத்தாலீப் என்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் வர்மாவின் பதிவிற்கு தனது வன்மம் நிறைந்த கருத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை அந்த கார்ட்டூன் வெளியானப்பின் இவர் சொல்வது போல ஏதேனும் கலவரம் ஏற்பட்டு இந்த கார்ட்டூனிஸ்ட் கொல்லப்பட்டால் இவரைக்கொன்ற அப்பாவிகள் மீதுத் தொடுக்கப்படும் வழக்கு செலவுகள் முழுவதையும் நானே ஏற்கிறேன்! இது அல்லாஹமீது சத்தியம்! என்னோடு ஒத்துழைப்பவர்கள் யாரும் இருக்கின்றீர்களா.
ஓவியருக்கு பகீரங்கமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சமத்துவம், சகோதரத்துவம், என்று டியூசன் எடுக்கும் திகவோ, திமுகவோ இன்று வரை மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் உட்பட தமிழக மக்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.