பிரான்ஸ் கொடுத்த அழுத்தத்தால் இந்தியாவிடம் மாட்டி கொண்ட பாகிஸ்தான்…!

பிரான்ஸ் கொடுத்த அழுத்தத்தால் இந்தியாவிடம் மாட்டி கொண்ட பாகிஸ்தான்…!

Share it if you like it

மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்டவனும் பல அப்பாவி மக்களின் இறப்பிற்கு காரணமான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் மீது முன் வைத்தது. தாவூத் எங்கள் நாட்டில் இல்லை என்று ஒசாமா பின்லேடன் தியாகி என்று கூறிய இம்ரான் கான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு. பாகிஸ்தானை கிரே பட்டியலில் தற்பொழுது வைத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு, செல்லும் நிதியை முற்றிலும் தடுத்து நிறுத்தாவிடில். கருப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்தது.

கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இதனை தடுக்கும் விதமாக. 88 தீவிரவாத அமைப்புகளுக்கு அண்மையில் தடை விதித்தது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பெயரையும். பாகிஸ்தான் வெளியிட்டு தற்பொழுது இந்தியா மட்டுமில்லாமல், உலக நாடுகளிடம் மீண்டும் தலை குனிந்து நிற்கும் அவல நிலைக்கு தற்பொழுது சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it