புகையிலை தொடர்பான மத்திய அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த- டாக்டர் ராமதாஸ்!

புகையிலை தொடர்பான மத்திய அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த- டாக்டர் ராமதாஸ்!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும். தமிழகத்தில் எதிர்ப்பதையே கொள்கையாக கொண்டுள்ள கட்சிகளின் மத்தியில். டாக்டர் ராமதாஸ் அவர்கள் அச்சட்டத்தினால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும். அல்லது தீமை ஏற்படும் என்பதை ஏழை, எளியவர்களுக்கு, புரியும் வண்ணம் சுட்டிகாட்டி கண்ணியமான அரசியல் செய்ய கூடியவர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு, தன் அரசியல் அனுபவத்தின் மூலம். நல்ல ஆலோசனைகளை வழங்குவது மட்டுமில்லாமல். எந்த ஒரு அரசிற்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதற்கு தயங்கியது இல்லை. அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கைக்கு. தனது முழு ஆதரவு தெரித்து, டுவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

புகையிலை பழக்கத்தை கைவிட விரும்புவோர் 1800-11-2356 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதும் நல்லது. இதை பயன்படுத்தி புகையிலை பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும்!


Share it if you like it