புதிய கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை – 4 கேப்சூல் போதும், காற்றுமாசு காலியாகும்

புதிய கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை – 4 கேப்சூல் போதும், காற்றுமாசு காலியாகும்

Share it if you like it

டில்லி அருகே, பூசாவில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் எட்டு நுண்ணுயிரிகள் கலந்த டிகம்போஸர் கேப்சூல்களை தயாரித்துள்ளது. ஒரு கேப்சூலின் விலை ரூ 5/-

ஒரு ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கர் தோட்டத்தில் 4 கேப்சூல்களை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் தோட்டத்தில் உள்ள பழைய பயிர்கள் மக்கிவிடும். இதனால் அவற்றை எரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் நிலம் செழிப்பாக மாறும். 2.5 ஏக்கர் நிலத்திற்கு ரூ 20 மட்டுமே செலவாகும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. முக்கியமாக காற்று மாசு அடைவது தடுக்கப்படுகிறது. இது டில்லி மற்றும் அண்டை மாநிலங்களின் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வாக அமையும்’


Share it if you like it