பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்

பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்

Share it if you like it

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்களை திறக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. 144 நீதிமன்றங்கள் பெண்களுக்கெதிரான குற்றங்களையும், 74 நீதிமன்றங்கள் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தரபிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் உன்னாவ் கிராமத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணநிதியில் இருந்து 25 ரூபாய் அளிக்கப்படும் என்று யோகி அறிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it