பைடன் ஆட்சியில் இந்திய உறவு – முதல் அறிக்கையே “டமால்”

பைடன் ஆட்சியில் இந்திய உறவு – முதல் அறிக்கையே “டமால்”

Share it if you like it

சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் மூன்றாவது முறையாக, பிரதிநிதிகள் சபைக்கு, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்திய சீன பதற்றம் குறித்து கூறியதாவது ;-

எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, செயற்கைக்கோள் படங்கள் பல வெளியாகி உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவை துாண்டிவிடும் நோக்கத்தில் சீனா செயல்படுவது உறுதியாகிறது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் போல், அதிபராக பதவியேற்க உள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன் நிர்வாகமும், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.

அதனால்தான், ஜோ பைடன் நிர்வாகத்தில், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ள, ஆன்டனி பிளென்கினும், இந்தியாவின் நீண்டகால நண்பர். ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிளென்கின் ஆகியோர் இந்தியா ஆதரவு கொள்கை உள்ளவர்கள். அதனால், சீனாவுக்கு எதிரான பிரச்னையில், இந்தியாவுக்கு முழு ஆதரவை, புதிய நிர்வாகம் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்


Share it if you like it

One thought on “பைடன் ஆட்சியில் இந்திய உறவு – முதல் அறிக்கையே “டமால்”

  1. பா ஜ க ஊழல் செய்பவர்களை ஊக்குவிக்கிறது. ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. வாரிசு அரசியலும் செய்கிறது. வாரிசு அரசியல் செய்யும் பா ம க , தே மு தி க, அ தி மு க , திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க ஏன் மிரட்டுகிறது.

Comments are closed.