போலி செய்தியை பரப்பி  மக்களையும் அடிமுட்டாள் என்று  கூறிய கம்யூனிஸ்ட் பத்திரிகை  தீக்கதிர் !

போலி செய்தியை பரப்பி மக்களையும் அடிமுட்டாள் என்று கூறிய கம்யூனிஸ்ட் பத்திரிகை தீக்கதிர் !

Share it if you like it

  • போலி செய்திகளை மக்களிடையே பரப்புவதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிறந்த ஆஸ்கர் விருதையே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதற்கு சான்றாக  பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், காவலன் துறையினர், துப்புரவு தூய்மை பணியாளர்கள் ஆகியவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கவுரவிக்கும் வகையிலும் மார்ச் 22 அன்று மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வாசலிலோ அல்லது பால் கனியிலோ நின்று ஒரு 5 நிமிடம் கைதட்டும்படி கூறினார்.
  • மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும், தொழிலதிபர்களும் கைதட்டி அதனை வீடியோவாக வெளியிட்டனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் பத்திரிகையான தீக்கதிர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் சுய ஊரடங்கின்போது கைத்தட்டிய மக்கள்தான் வரலாற்றிலேயே படுமுட்டாள்கள் என யுனெஸ்கோ நிறுவனம் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அதனை FACT CHECK செய்ததில் அந்த யுனெஸ்கோ ட்விட்டர் அக்கௌன்ட் போலியானது என்று தெரிய வந்துள்ளது. அதன்பின் அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது. போலியான செய்தியை பரப்பி அதிலும் பெரும்பான்மையான மக்களை அடிமுட்டாள் என்று சொன்ன கம்யூனிஸ்ட் பத்திரிகை தீக்கதிர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share it if you like it