போலி செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட காங்கிரஸ் பொறுப்பாளர் – கழுவி கழுவி ஊத்திய நெட்டிசன்கள் !

போலி செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட காங்கிரஸ் பொறுப்பாளர் – கழுவி கழுவி ஊத்திய நெட்டிசன்கள் !

Share it if you like it

  • நேற்று, முன்னாள் ஆஜ் தக் மற்றும் ஏபிபி செய்தி பத்திரிகையாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் இரண்டு பெண் சிறுமிகளின் கால்கள் வெடிப்புற்று பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்தது. அந்த புகைப்படத்தை பதிவிட்டு அதன் மேல் நீங்கள் எப்பொழுதாவது தாய் இந்தியாவின் கால்களைப் பார்த்துள்ளீர்களா ? என்று பதிவிட்டிருந்தார்.

blank

  • இந்த பதிவை காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான அமெரிக்கை வி நாராயணன், கடந்த மாதம் இதே படத்தைப் பயன்படுத்தி, ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஏழைகள் போராடி வருவதாகவும், பணக்காரர்களுக்கு அரசாங்கத்தால் உதவி செய்யப்படுவதாகவும் பதிவிட்டிருந்தார்.

  • ஆனால் உண்மை என்னவென்றால் அந்த புகைப்படமானது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தி லண்டன் போஸ்டின் 2018 பத்திரிகையில் பாகிஸ்தான் ஜனநாயகத்தின் உண்மையான முகம், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஒரு ஸ்பான்சர் தேவை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
  • ட்விட்டரில் பலரால் இந்த உண்மை சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், பாஜ்பாய் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். இருப்பினும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை வி நாராயணன், பாகிஸ்தானில் இருந்து 2018 படத்தைப் பயன்படுத்திய தனது ட்வீட்டை இன்னும் நீக்கவில்லை. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் அமெரிக்கை வி நாராயணன் அவர்களை ட்விட்டரில் தாறுமாறாக விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.

Share it if you like it