மராட்டிய மாநிலத்தில் நேற்று நடைப்பெற்ற மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சியில் சிவசேனாவின் மூத்த தலைவர்களில், ஒருவரும் உத்தவ் தாக்கரேவை முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க, முக்கிய காரண கர்த்தாவாக திகழ்ந்தவருமான சஞ்செய் ராவத், இப்பொழுது கடும் அதிருப்தியில் உள்ளதாக அங்கிருந்து செய்திகள் வருகின்றன. இந்நிலையில் நேற்றைய மந்திரி சபை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி மற்றும் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் சிவசேனாவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இம்முறை அமைச்சரவையில், இடம் அளிக்கப்படவில்லை என்பது அவர்களின் ஆதரவாளர்கள், மத்தியில் பெரும் புகைச்சலை எற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆலேசனைப்படி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தந்தை முதல்வராகவும், மகன் அமைச்சராகவும் இடம் பெற்று இருப்பது அவர்களுக்கு உள்ளூர மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நன்கு அறிய முடிகிறது. இந்நிலையில் சஞ்செய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் மந்திரி சபையில் இடம் கிடைக்காதது மட்டுமில்லாமல், அவரும் முன்தினம் நடந்த மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ளாதது, சிவசேனா மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனுக்கு ‘நொங்கு’ மூத்தவர்களுக்கு ‘சங்கு’ – சிவசேனா!
Share it if you like it
Share it if you like it