பிரதமர் வேண்டுகோளுக்கு, இணங்க இதுவரை தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என. பலர் தங்களால் இயன்ற உதவிகளையும், நிதிகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகின்றனர்.
கால் நூற்றாண்டுக்கு மேல், தமிழகத்தில் இருக்கும் திராவிடர் கழகம். இக்கட்டான சூழ்நிலையில் தமிழக, மக்கள் அவதியுறும்பொழுது. தங்களின் கீழ் செயல்படும் பல்கலை கழகத்தையோ அல்லது பெரியார் திடலையோ அரசின் பயன்பாட்டிற்கு வழங்க துளியும் ஏன்? இவர்களுக்கு மனம் வரவில்லை.
அதுமட்டுமில்லாது இதுவரை திராவிடர் கழகமோ, அருணனோ, சுப.வீரபாண்டியனோ இதுவரை எவ்வளவு நிதி அரசிற்கு வழங்கியுள்ளனர். என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகவாதிகள் வழங்கிய நிதிகள்.
மாதா அமிர்தானந்தமயி ரூபாய் 10 கோடியை மத்திய அரசுக்கும். கேரள அரசிற்கு ரூ.3 கோடியை வழங்கியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அனுமன் கோவில் அறக்கட்டளையானது கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு ரூ.1 கோடி அளித்துள்ளது