இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களை விட யோகி ஆதித்யநாத் மிகவும் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் மக்கள் சார்ந்த நலன் சார்ந்த அதிரடி திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும். அடிப்படை உரிமைகள் அனைத்து மக்களுக்கு முழுமையாகவும், எளிதில் சென்றடையவும் மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசாங்கம் சார்ந்த உதவிகளை வழங்கவோ அல்லது பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடவோ தடை விதிப்பது என்று உயர் அதிகாரிகளுடன் அலோசித்து வருகிறார். மேலும் நாட்டில் வேலையின்மை அதிகரிப்பதற்கு மக்கள் தொகை அதிகரிப்பதே காரணம் என்று கூறியுள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.