மதுக்கடைகளை மூடினால் அரசாங்கம் தள்ளாடும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் அராஜக செயல்!

மதுக்கடைகளை மூடினால் அரசாங்கம் தள்ளாடும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் அராஜக செயல்!

Share it if you like it

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் கிருமி இன்று உலகம் முழுவதும் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் விளைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பாரத தேசத்தில் இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கொரோனா அச்சம்  காரணமாக, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழகம் உள்பட பல மாநில அரசுகள், மதுக்கடைகளை மூடும் படி  உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள அரசோ மதுக்கடைகளை எல்லாம் மூடிவிட்டால் மாநிலத்தின், வளர்ச்சிக்கு தேவையான பொருளாதாரம், இல்லாமல் போய்விடும் என்று கூறியிருப்பது, கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நலனில் துளியும் அக்கறை, இல்லாத கேரள  கம்யூனிஸ்ட் அரசின் செயலிற்கு பலரும், தங்களது கடும் கண்டத்தையும், எதிர்ப்பையும் கூறி வருகின்றனர். அனைவரையும் கண்டிக்கும் கம்யூனிஸ்ட் அரசு. கொரோன பரவ காரணமான சீன நாட்டிற்கு  இதுவரை ஏன்? கண்டன அறிக்கையோ, தங்களது  எதிர்ப்பையோ ஏன்? வெளிப்படுத்தவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it