கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்த லீலா அந்தர்ஜனம் என்பவருக்கு 5 குழந்தைகள். 4 குழந்தைகளை அவரிடம் இருந்து காலன் பறித்து கொண்டான்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது அன்பு கணவரையும் இழந்தார். தற்பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட மகனோடு, வாழ்ந்து வரும் லீலா அந்தர்ஜனம். தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன் மகனையும், அவரை போல் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பராமரிக்கும் பொருட்டு ( 71 செண்ட் )3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சேவா பாரதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்பொழுது அந்த நிலத்தில் சுகர்மா விகாச கேந்திரம் என்னும் பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லமாக அதனை சேவா பாரதி கட்டி வருகிறது இம்மையத்தை நவம்பரில் திறக்க திட்டமிடப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Not a mere shelter, 'Sukarma Vikasa Kendram', a real home for differently abled persons by Sevabharati Kerala: Smt Leela Antharjanam donated 3.5 crore worth land to Sevabharati. So many others are coming forward to support this noble cause. Centre will be inaugurated in November. pic.twitter.com/nkf9mezXPD
— J Nandakumar (@kumarnandaj) August 18, 2020