Share it if you like it
- மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் மும்பையின் அக்ரிபாடாவில் அமைந்துள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் வுஹான் கொரோனா வைரஸுக்கு நேர்மறையாக 26 செவிலியர்கள் மற்றும் 3 மருத்துவர்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் வெளியில் உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களுக்கு பரவியதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவான அலட்சியமே காரணம் என்று பரவுவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
- மேலும் அங்கு மருத்துவமனையில் பணி செய்கிற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
Share it if you like it