மஹாராஷ்டிராவில் சன்யாசிகளுடன் கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் குடும்பம் பரிதாப நிலை – இழப்பீடு வழங்குமா மாநில அரசு !

மஹாராஷ்டிராவில் சன்யாசிகளுடன் கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் குடும்பம் பரிதாப நிலை – இழப்பீடு வழங்குமா மாநில அரசு !

Share it if you like it

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் சிகானே மகாராஜ் கல்பவ்ரிக்ஷ்கிரி (70), சுஷில் கிரி மகாராஜ் ஆகிய இரண்டு சன்யாசிகளையும், ஓட்டுனரான நிலேஷ் தெல்கடேவையும் கம்யூனிஸ்ட் கும்பல்கள் ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக அடித்து கொன்ற நிகழ்வானது நாட்டையே உலுக்கியது.

அதில் இரண்டு சன்யாசிகளுக்கு குடும்பம் மற்றும் சொந்தம் என்று எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கொல்லப்பட்ட ஓட்டுனரான நிலேஷ் தெல்கடேவுக்கு அம்மா, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த குடும்பம் முழுவதும் இவர் ஒருவரின் வருமானத்தை நம்பித்தான் இருந்தது. தற்போது அவரும் இல்லாத நிலையில் அந்த குடும்பம் பெரும் துயரத்திற்குள்ளாகி உள்ளது. எனவே மஹாராஷ்டிரா அரசு கருணை கொண்டு கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


Share it if you like it