பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிவுறுத்தலின்படி. பஸ் வசதி இல்லாத பகுதிகளில் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களின் நலன் கருதி வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க பாஜக இளைஞரணி முடிவு செய்துள்ளது. மாவட்ட வாரியாக தொடர்பு மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே வாகன உதவி தேவைப்படும் மாணவ- மாணவிகள் வருகிற 10- ஆம் தேதி (10.9.2020) மாலை 6 மணிக்கு முன்பே தங்களின் முழு விவரத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி பாஜக இம்முடிவு எடுத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய் என்று மாணவர்களை குழப்பி வருகிறது திமுக. உங்களால் சாதிக்க முடியும் என்று மாணவர்களை களத்தில் இறங்கி ஊக்கப்படுத்தி வருகிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
September 13 th on the day of #NEET @BJYMinTN will provide free shuttle service from homes to centres for students who don’t have transport. Thank you @poonam_mahajan ji for inspiring us to do this. @blsanthosh @PMuralidharRao pic.twitter.com/lDRNY4q0qF
— Vinoj P Selvam (@VinojBJP) September 3, 2020