முகலாயர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீட்டு ஹிந்துக்களிடமே தாருங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதிய இஸ்லாமிய தலைவர்…!

முகலாயர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீட்டு ஹிந்துக்களிடமே தாருங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதிய இஸ்லாமிய தலைவர்…!

Share it if you like it

பண்டைய  கோயில்களை இடித்து முகலாய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மசூதிகளை மத்தியஸ்தம் செய்து அவற்றை அகற்றி இந்துக்களிடம் ஒப்படைக்க உயர் மட்டகுழு அமைக்கப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னாள் ஷியா வக்ஃப் வாரியத் தலைவர் சையத் வசீம் ரிஸ்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகலாய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட முக்கிய பழங்கால கோயில்களில் அயோத்தியில் ராம் ஜன்மபூமி, மதுராவில் கிருஷ்ண ஜன்மபூமி, வாரணாசியில் காஷி விஸ்வநாத் கோயில் ஆகியவற்றை மேற்கோள் காட்டி வசீம் ரிஸ்வி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சில முஸ்லீம் அமைப்புகளை திருப்திப்படுத்தவும், இந்துக்களின் உரிமைகளை மட்டுப்படுத்தவும் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலச் சட்டம் 1991-ஐ அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சட்டங்கள் கொண்டு வாருங்கள் அல்லது ஒரு குழுவை அமையுங்கள். மசூதிகளுக்கு மத்தியஸ்தம் செய்து அவற்றை அகற்றுவதற்கும், முகலாய பேரரசர்களால் இடிக்கப்படுவதற்கு முன்பு இருந்த பண்டைய கோயில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உயர்மட்ட குழு.  அமைக்குமாறு ரிஸ்வி கேட்கொண்டுள்ளார்.

“நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், முகலாய பேரரசர்களின் சுரண்டலை  தடுக்க முடியவில்லை. ஆனால் மத உடைமைகளை ஹிந்துக்களுக்கே  திருப்பி கொடுப்பது நீதியாக இருக்கும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it