இந்தியாவை மட்டுமில்லாது உலக நாடுகளையே, சோக கடலில் ஆழ்த்திய சம்பவம் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல். இதில் பல அப்பாவி மக்கள் உட்பட, காவல்துறையை சார்ந்தவர்களும் கொடுரமாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் ரணம் மக்களின், மனதில் மாறா வடுவாக இன்றும் இருந்து வருகிறது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலில்,
தொடர்புடையவனும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி, பெற்றவனுமான அபு ஹம்ஸா என்கின்ற, அபு ஜுண்டால் என்னும் பயங்கரவாதிக்கு. மும்பை எம்.எல்.ஏ ஹாஸ்டலில், உள்ள ஒரு அறையில் அவன் தங்கியிருந்தான். அந்த அறை சோஃபியா கானின் அறை என்பதை, தீவிர விசாரணைக்கு பின் காவல்துறை, கண்டறிந்தது.
இந்நிலையில் மாநிலங்களவைக்கான வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சி சோஃபியா கானை, முன்னிறுத்தி இருப்பது அம்மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் உள்ள அரசியல், நோக்கர்கள் பயங்கரவாத தொடர்புகளைக் கொண்ட, ஒரு நபரை நியமனம் செய்துள்ள என்.சி.பி.யின் நோக்கம், தான் என்ன என்று கேள்வி? எழுப்பி வருகின்றனர்.