மூக்குடைந்த கேரள கம்யூனிஸ்ட் அரசு – கேரள உயர் நீதிமன்றம்!

மூக்குடைந்த கேரள கம்யூனிஸ்ட் அரசு – கேரள உயர் நீதிமன்றம்!

Share it if you like it

1.கொரோனா தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் பற்றி கவலையில்லை.
2. நோய் தொற்று பரவ கூடாது என்கின்ற நல்ல நோக்கமில்லை,
3. சமூக ஆர்வர்களின் நியாயமான கேள்விக்கு பதில் இல்லை. கேரள கம்யூனிஸ்ட் அரசின் மக்கள் விரோதா போக்கு.

கொரோனா தொற்றால் உலகமே கதறிக் கொண்டு இருக்கிறது. இதுவரை  8 லட்சத்தையும் கடந்து, பலர் தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலயே கேரள அரசு மட்டுமே, கொரோன எதிரொலியை பொருட்படுத்தாமல், பெவ்கோ நிலையங்கள் மூலமாக, சோம பானம் வழங்கி, குடிமகன்களை காக்கும் அரசாக திகழ்ந்தது.

பிரதமரின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, வேறு வழியில்லாமல் தனது, பிடிவாதத்தை தளர்த்தி கொண்டு மதுபான கடைகளுக்கு, பிரியா விடை கொடுத்தது நடிகர் கமல் பாராட்டும் பினராய் அரசு. அண்மையில் ஒரு இளைஞர் மது கிடைக்கவில்லை, என்பதால் தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா கிருமியால், நிகழும் மரணங்கள் முக்கியம் அல்ல, தோழர்களின் உயிர் மதுவிற்காக போக கூடாது. என சீமானின் வணக்கத்திற்குரிய அருணன் போன்று ஆழ்ந்த சிந்தனைக்கு பின். மருத்துவர்களின் பரிந்துரையுடன், வருவோருக்கு மது வழங்கப்படும் என்று, குடிமகன்களின் வயிற்றில், கள்ளை வார்த்து. தெளிந்த அறிக்கையை வெளியிட்டது, மக்கள் விரோத கம்யூனிஸ்ட் அரசு.

எர்ணாகுளம் டாக்டர் சீட்டு

இதற்கு பலர் மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த ரண களத்திலும் குடிமகன்களுக்கு கிளுகிளுப்பு, அவசியமா என்பது போல், அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் முதல் நெட்டிசன்கள் வரை, கேரள அரசிற்கு எதிராக, கொஞ்சம் அதிகமாகவே (மஸ்கோத் அல்வா) கிண்டினர். கொரோனா எதிரொலியின் தீவிரத்தை உணர்ந்து கேரள உயர் நீதிமன்றம், அரசின் ஆக்கபூர்வமான செயலுக்கு, 3 வாரத்திற்கு பெரிய திண்டுக்கல் பூட்டை, போட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it