மேற்கு வங்கத்தில் உணவின்றி 20 நாட்கள் தவித்த 400 ஏழை குடும்பங்கள் – நடவடிக்கை எடுக்குமா மம்தா பேனர்ஜி அரசு !

மேற்கு வங்கத்தில் உணவின்றி 20 நாட்கள் தவித்த 400 ஏழை குடும்பங்கள் – நடவடிக்கை எடுக்குமா மம்தா பேனர்ஜி அரசு !

Share it if you like it

கொரோனா வைரஸின் தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மே 3 வரை ஊரடுங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தினசரி ஊதியம் பெறுபவர்களும், ஏழை மக்களும் அதிக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் டோம்கல் நகராட்சி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் 20 நாட்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்கள் புதன்கிழமை மூன்று மணி நேரம் பெரஹாம்பூர்-டோம்கல் மாநில நெடுஞ்சாலையில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it