மோடி அரசை தவறாக விமர்சிப்பதற்காக புதுப்புது யுக்திகளை கையாளும் காங்கிரஸ் !

மோடி அரசை தவறாக விமர்சிப்பதற்காக புதுப்புது யுக்திகளை கையாளும் காங்கிரஸ் !

Share it if you like it

  • இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தனர். அந்த காணொளியில் இரண்டு காணொளிகளை கட் செய்து மற்றும் எடிட் செய்து ஒன்றாக இணைத்துள்ளனர். அதில் ஒரு பக்க வீடியோ கிளிப்பில் ஒரு மனிதன் ரயில் பாதையில் அமர்ந்துகொண்டு பயணிகள் சாப்பிட்டு வீசியெறிந்த உணவினை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அடுத்த வீடியோ கிளிப்பில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குகின்றனர். இந்த இரண்டு வீடியோ கிளிப்புகளையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அந்த பதிவிற்கு மேல் “மனிதகுலத்தின் வித்தியாசம்” என்று தலைப்பினை கொடுத்து “கொரோனா நெருக்கடியின் போது உணவுக்காக ஏங்குகிற ஏழை நாட்டு மக்கள் மீது பாஜக பின்வாங்கியது, அதே நேரத்தில் காங்கிரஸ் தனது அலுவலகங்களை நாட்டு மக்களுக்கு சமையலறை ஆக்கியது” என்று பதிவிட்டது.

  • ஆனால் உண்மை என்னவென்றால், ரயில் பாதையில் எறியப்பட்ட உணவினை உண்ணும் ஒரு மனிதனின் இடது வீடியோ கிளிப்பானது ஆகஸ்ட் 2019 ஆம் வருடம் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி யூடியூப் சேனலான O.M.G Page 2 இல் ‘தயவுசெய்து உங்கள் உணவை வீணாக்காதீர்கள்’ என்ற தலைப்பில் பதிவேற்றப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • எனவே மோடி அரசை பற்றி மக்களிடையே தவறான கண்ணோட்டத்தில் கொண்டு சேர்க்க இதுபோல் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட விடீயோவை பாஜக அரசை விமர்சிப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆக இவர்கள் ஆட்சிக்காக இதுபோல் கீழ்த்தரமான செயலில் காங்கிரசின் தலைமையே ஈடுபட்டால், காங்கிரசில் இருக்கும் தொண்டர்கள் அப்படித்தானே செய்வார்கள். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிருபரான அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியை தாக்கிய நிகழ்வானது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது காங்கிரஸின் அந்த காணொளி பதிவானது வைரலானதால், உண்மையறிந்த நெட்டிசன்கள் காங்கிரசை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். தலைமை சரியாக இருந்தால்தான் தொண்டர்களும் சரியாக இருப்பார்கள், தலைமையே தவறு செய்தால் தொண்டர்கள் அதற்குமேல் தவறு செய்வார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சியாக உள்ளது.

Share it if you like it