யோகி ஆதித்யநாத் அரசு சாதனை..!

யோகி ஆதித்யநாத் அரசு சாதனை..!

Share it if you like it

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

கொரோனா எதிரொலி காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்தது.. இதனால் பலர் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..

இதன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களின் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டது..

வேலை பறிபோன தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் கரீப் கல்யாண் ரோஜ்கர் யோஜனா மூலம் மத்திய அரசு 5000 கோடி ரூபாய் திரட்டி அதன் மூலம் 125 நாட்கள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

9 ஆயிரத்து 359 கோடி ரூபாய் செலவில் உ.பி  அரசாங்கம் 10 கோடியே 58 லட்சத்து 17 ஆயிரத்து 358 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகம் வழங்கி இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்று பெயர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “யோகி ஆதித்யநாத் அரசு சாதனை..!

  1. நிறைய பேருக்கு வேலை கொடுத்தும் ஏன் குஜராத் & பம்பாய் திரும்பி கிறார்கள்? Wages மிக குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள்

Comments are closed.