ராஜபக்சே – மோடி உச்சி மாநாட்டின் போது விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய இருதரப்பு தலைப்புகளில் மீனவர்களின் பிரச்சனை முக்கியமான ஒன்று என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை பிரதமருடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட பிரதமர் மோடியின் முயற்சியின் பேரில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்தல் என்பது தொடர்ச்சியான பிரச்சனையாக இருந்து வருகிறது, கடந்த காலங்களில் இதுதொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கிடையில் பல உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் நடந்துள்ளது.
தற்போது நடக்கவுள்ள மாநாட்டில், இரு தலைவர்களுக்கிடையேயான தொடர்பு, அரசியல், பொருளாதார, நிதி, மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகள், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் , பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள், போன்ற விஷயங்களை பற்றியும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த உச்சி மாநாட்டில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும், ஆலோசிக்கப் படவேண்டிய துறைகளின் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்.
இரு நாடுகளுக்கிடையே இது மிக முக்கியமான பேச்சு வார்த்தையாக இருக்கக் கூடும் எனவும், இந்த இருதரப்பு உச்சி மாநாட்டின் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என இரு நாட்டு மக்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.