ராமர் ஒரு ஜாதி வெறியரா?

ராமர் ஒரு ஜாதி வெறியரா?

Share it if you like it

இங்கே எல்லாரும் ராமனை ஏற்காமல் இருக்க ஆளுக்கொரு காரணம் வைத்துள்ளனர்.

அதில் முக்கியமானது சம்பூக வதம். ராமன் சாதி பார்ப்பவன் எனும் புரட்டைப் பரப்ப இவர்கள் எடுத்த ஆயுதம் அது.

இந்த கதை வால்மீகி ராமாயணத்தில் கிடையாது. ஸ்ரீமத் பாகவத்திலும் இல்லை. இன்னும் ஆதார ராம அயனம் எதிலும் இக்கதை கிடையாது. 5ஆம் நூற்றாண்டின் இடைச்செருகல் இது நிரூபணமான உண்மை.

முதலில் அந்த கதை என்னவென்று பார்த்துவிடுவோம். திடீரென ஒருநாள் ஒரு பிராமணன் கையில் தனது பிள்ளைகளின் பிணத்தை ஏந்தி வருகிறான். ஆட்சியில் இருக்கும் ராமன் நடந்ததை வினவ, சூத்திரன் ஒருவன் வேத மந்திரங்களை ஓதி தவம் செய்கிறான். அதனால் விளைந்தது என்கிறான். உடனே ராமன் புஷ்பக விமானத்தில் (ராவணனிடம் இருந்த புஷ்பக விமானமேதான்) புறப்பட்டு காடெங்கும் தேடிக் கண்டுபிடிக்கிறான். அவனிடம் உனது பெயர் என்ன எனக்கேட்க, தன் பெயர் சம்பூகன், அவனோ தான் ஒரு சூத்திரன் என சொல்ல, சம்பூகனின் தலையை ராமன் சீவுவதாக அருமையான கதை அது.

ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். காரணம் என்ன?

வேத மந்திரங்களை ஓதிய குற்றத்திற்காக சம்பூக வதம் நடந்ததாம். அதே லாஜிக் படி செல்வோம்.

ராமன் ராவணனைக் கொள்கிறான். ராவணன் அளவுக்கு வேதங்களைக் கரைத்துக் குடித்தவன் யாருமில்லை. மேலும் ராவணன் ஒரு பிராமணன்.

ராமன் பரசுராமனுடனும் போர் புரிகிறான். பரசுராமரும் ஒரு பிராமணன். எனவே ராமன் பிராமணனுக்கு எதிரானவன்…

ராமன் சில க்ஷத்திரிய மன்னர்களுடனும் போர் புரிகிறான். அவன் க்ஷத்திரிய குலத்திற்கு எதிரானவன்…

மேலும் வாலி எனும் குரங்கு வம்ச அரசனைக் கொள்கிறான். எனவே ராமன் விலங்குகளுக்கு எதிரானவன். இந்த அதி புத்திசாலிகளெல்லாம் மேனகா காந்திக்கு கடிதம் எழுதலாம். விலங்குகளைக் கொல்லும் ராமனைத் தடை செய்யக் கோரி.

ராமாயணம் தொடங்குவதே ஒரு சூத்திரனின் சாபத்தில் தான். தசரதன் தவறுதலாகக் கொன்று சாபம் பெற்ற ஷ்ரவன் ஒரு சூத்திரனே. ஒரு சூத்திரனின் சாபம் பலித்தது என்பதை உணர்ந்த ராமன், மேலும் ஒரு சூத்திரனைக் கொன்று மீண்டும் சாபத்திற்கு ஆளாகும் அளவுக்கு முட்டாளா?

ராவணன் வதம் முடிந்தபிறகு அங்கிருந்த புஷ்பக விமானத்தை ராமன் குபேரனிடம் அளித்ததாகக் கூறுகிறது ராமாயணம். ராவணனைத் தவிர வேறு யாரிடமும் அவ்வகை விமானம் இல்லை. பின் எப்படி சம்பூகனைக் கொல்ல புஷ்பக விமானத்தில் சென்றான் ராமன். இதெல்லாம் லாஜிக் பிழைகளை எல்லாம் சிறு குழந்தைகள் கூட அறிந்து சொல்லிவிடும்.

இது போன்ற பிதற்றல்களை எல்லாம் கொண்டு வந்து வாதம் செய்வதற்கு முன்பாக, சற்று பகுத்தறிவுடன் சிந்தித்தால் ராமாயணம் கூறும் செய்தி என்னவென்பது புரியும்.

நீங்கள் சொல்லும் கீழ் சாதிக்கெல்லாம் கீழான சூத்திரன் குகன். அவனைத் தன் தம்பியாய் ஏற்று, குகனுடன் ஐவரானோம் என்கிறான் ராமன். அவனை விட சமூக நீதியை வேறு யார் காத்தது இங்கே?

சபரி எனும் மலைவாழ் பெண்ணிடமிருந்து பழங்களை வாங்கி உண்டு பசியாற்றுகிறான் ராமன். அதுவும் வெறும் பழங்கள் அல்ல, சபரி கடித்துத்தின்ற பாதி மிச்சம் இருக்கும் பழங்களை.

இது போதுமா இல்லை இன்னும் வேண்டுமா உங்கள் பொய்களை உடைத்தெறிய?

சம்பூக வதம் என்பது 100% பொய்யான, இடைச்செருகல்.

இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றிற்கெல்லாம் மூலம் எனக் கருதப்படுவது வால்மீகி ராமாயணம். அதனை எழுதியது வால்மீகி. அவர் ஒரு சூத்திரன்.

ராமன் சூத்திரர்களுக்கு எதிரானவன் என்றால், ஒரு சூத்திரன் ஏன் ராமனை மனித குலத்திலேயே சிறந்தவனாகக் காட்ட வேண்டும்.

ராம பிறப்பை விஷ்ணுவின் அவதாரமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு இணையற்ற கடவுள்.

இல்லை, ராமர் ஒரு மனிதர் தான், அப்படி ஒரு அரசன் நல்லாட்சியினைக் கொடுத்திருக்கலாம் என வரலாறாகப் பார்த்தாலும் தவறில்லை. வரலாற்று ஆய்வாளர்களின் பசிக்கு தீனி போடும் ஆதர்ச நாயகன் அல்லவா ராமன்.

இரண்டும் இல்லை, அது வெறும் கற்பனை என்றாலும் சரி. இப்படிப்பட்ட கற்பனைத்திறன் வாய்ந்த இலக்கியம் ஒரு மனிதனுக்கு நல் போதனைகளைத் தரும் என்ற வகையில் தாராளமாக ஏற்கிறோம்.

ஆனால் இது எதிலும் இல்லாது, ராமாயணம் ஒரு சாதிய வாதம் பேசும் பார்ப்பனீய காவியம், ராமன் ஒரு சாதியவாதி என்றெல்லாம் உளறுவது… ஒன்று நீங்கள் திராவிட கட்சிகளின் விஷமேறிய மேடைப்பேச்சுகளைத் தவிர வேறு எதையும் கேட்டு வளரவில்லை என்று அர்த்தம். இல்லையெனில் நல்ல மனநல மருத்துவரைப் பார்ப்பது நலம்.

– Karthik Sreenivas 


Share it if you like it