Share it if you like it
குடியுரிமை திருத்த மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக ஏற்க்கப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தின் சில இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு போலி செய்திகளும், வதந்திகளும் பரப்பப்படுகின்றன. மேலும் இந்திய இராணுவம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் இதனை இந்தியா இராணுவம் மறுத்துள்ளது. இந்திய இராணுவம் குறித்த வதந்திகளையும் போலியான செய்திகளையும் யாரும் நம்பவேண்டாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
Share it if you like it