ஜம்மு மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மதியம் 1 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மொத்தமுள்ள 2,703 வாக்காளர்களில் 2,690 பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா சவுகான் கூறினார். இதில் 1,797 ஆண்களும், 893 பெண்களும் அடங்குவர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 310 வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு 1,092 பேர் களத்தில் உள்ளனர். இதில் 27 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜம்மு உள்ளாட்சி தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவான சம்பவம் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். அதுவும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் மாநிலத்தில் பரபரப்பு நிலவி வரும் இந்த நேரத்தில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரலாறு படைத்த ஜம்மு மக்கள்.99.5 % வாக்குப்பதிவு..!
Share it if you like it
Share it if you like it