வறுமையில் போராடி..! உயர்ந்த லட்சியத்தை அடைந்த….! அஞ்சல் கங்வாலுக்கு குவியும் பாராட்டு…!

வறுமையில் போராடி..! உயர்ந்த லட்சியத்தை அடைந்த….! அஞ்சல் கங்வாலுக்கு குவியும் பாராட்டு…!

Share it if you like it

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஞ்சல் கங்வாலுக்கு மாநிலத்தை பெருமைப்படுத்திய மகள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து சில நூறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள நீமுச் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தேநீர் கடை நடத்தி வருபவர் சுரேஷ் கங்வால் .தனது அன்பு மகளின் ஆசையை தன் கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். 24 வயதான அஞ்சல் கங்வால் சமீபத்தில் தான் விமானப்படையில் பைலட் அதிகாரியாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image
24 வயதில் மிகப்பெரிய பொறுப்பு… விமானப்படையின் பறக்கும் அதிகாரியாக பொறுப்பேற்பு..! சாதித்த டீ கடைக்காரரின் மகள்..!

தனது மகளின் கல்வி கட்டணத்திற்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி மகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஞ்சல் கங்வாலுக்கு மாநிலத்தை பெருமைப்படுத்திய மகள் என்று வாழ்த்து கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் நம் பாரத நாட்டை காக்க போர் விமானத்தில் வானில் வலம் வருவார் என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமை என்பது நிதர்சனமான உண்மை.


Share it if you like it