வாரணாசியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா என்பவர் இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். 1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார். தீனதயாள் உபாத்தியாயா, 11 பிப்ரவரி 1968 அன்று இரவு ரயிலில் லக்னோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். உத்திரப் பிரதேசம், முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் இருப்புப் பாதையில் தீனதயாள் உபாத்தியாயா, அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.