விதிகளை மீறி கூட்டம் கூடியவர்களை கேள்வி கேட்டதற்காக கொடூரமாக தாக்கிய  டிஎம்சி கட்சியினர் !

விதிகளை மீறி கூட்டம் கூடியவர்களை கேள்வி கேட்டதற்காக கொடூரமாக தாக்கிய டிஎம்சி கட்சியினர் !

Share it if you like it

  • கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் பாதிப்புகளை தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாருய்பூரின் பழைய சந்தை பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில், கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இதைப் பார்த்ததும், பாருய்பூரில் உள்ள பைத்யா பாராவில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இதனை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். ஆனால் டி.எம்.சி ஆர்வலர்கள் அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கீழே தள்ளிவிட்டனர்.
  • இதை பார்த்த அந்த பெண்ணின் சகோதரர் அவர்களிடம் வாக்குவாதம் செய்ய அந்த கும்பல் அவரையும் தாறுமாறாக கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். பின் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அவர் தலையில் பல தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • பின்னர், பாப்பா பால் பருய்பூர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் இவரின் குடும்பம் அதிர்ச்சியிலும் பீதியிலும் உள்ளது.
  • மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியின் தலைமையில் ஆளுங்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

blank


Share it if you like it