Share it if you like it
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானானது வியன்னா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஐ.நா பொதுச்சபையில் சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்காயி யூசப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வியன்னா மாநாட்டில் உண்டாக்கப்பட்ட விதி 36 இவ்வழக்கிற்கும் பொருந்தும் ஆனால் பாகிஸ்தான் இதனை பின்பற்றவில்லை என்றார். குல்பூஷன் ஜாதவ் இந்தியாவை சார்ந்த முன்னாள் கடற்படை வீரர் ஆவார். ஆப்கானிஸ்தானில் இருந்த அவரை பாகிஸ்தான் உளவுத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாதவ் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றது. இதனை ஜாதவும் இந்திய அரசும் மறுத்து வருகின்றன. அவரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it